உலகநாயகன் கமல்ஹாசன்,ஷங்கர் கூட்டணியில் கடந்த இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பழம்பெரும் கட்டிடம் ஒன்றில் இன்று பூஜையுடன் தொடங்கியது .காலை 9 30 மணிக்கு பூஜை தொடங்கியது இதில் கமல்ஹாசன் லைகா பட நிறுவன நிர்வாகிகளாக சுபாஷ்கரன் கருணாமூர்த்தி காஜல் அகர்வால் கலை இயக்குனர் முத்துராஜ் ,எடிட்டர் சுரேஷ் அர்ஸ், பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் ஏ எம் ரத்னம், ரவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர் காலை 10.15 மணிக்கு கமல்ஹாசன் நடித்த முக்கிய காட்சி ஒன்று படமானது இதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஸ்டூடியோவில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது.