தமிழ்நாட்டு மக்களை குறிப்பா ரஜினி,அஜித் ரசிகாஸ் ஆர்மியை நீங்க தான் காப்பாத்தணும்.
பேட்ட,விஸ்வாசம் படங்களில் யார் படம் கலெக்சன்ல டாப் என்பதை நீங்கதான் கண்டு பிடிச்சு சொல்லி காப்பாத்தணும்.
காச வாங்கிட்டு பொய்யா கூவிக்கினு இருக்கானுங்க.
இதில எவன் சொல்றது உண்மை,எவன் சொல்றது பொய்னு புரியல.
குத்தி வெட்டிக்கிட்டு அப்பாவி ரசிகாஸ்தான் சாவுறாங்க!
அதனால சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள்,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ,கூலிகளை ஏவி விட்டு கூவச்சொல்ற குண்டாஸ் இவங்க மேல ரெய்டு நடத்தி உண்மையை வெளியே கொண்டாங்க.
அடி மடியில சுருட்டி வெச்சாலும் விட்றாதிங்க.
ரெய்டு விடுறதில தெறிச்சு ஓடணும்! தாங்க முடியலிங்க.
விடிஞ்சி எந்திரிச்சா இவனுங்க விடுற பீலா செம டென்சனா இருக்கு.!