சூர்யா ,கார்த்திக்கு அப்பா காட்டிய வழி.!

‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு’ என்பது வள்ளுவம் .அறநூல்.

தாயும் தந்தையும் நன்மக்களை  முறை பிறழாது வளர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.அரவணைக்க தவறி விட்டால் குழந்தை தன்னுள் பாதுகாப்பாற்ற தன்மையை உணரும் நிலை வந்து விடும். அதனால்தான் ‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச்செயல் ‘என்கிறார் திருவள்ளுவர்.

மகனை  தன்னை விட செல்வநிலையில் உயர்ந்தவனாக இருக்கச் செய்யவேண்டும் என அர்த்தம் அல்ல.

தந்தையைவிட அறிவுடையோனாக்கும் முயற்சி என்பதே சரியான பொருள்.

“என் பிள்ளை யோக்கியன்தான் என்று மனசு நினைத்து விட்டால் அதற்கு ஈடான நிம்மதி கிடையாது” என்பார் கவியரசர் கண்ணதாசன்.கோயிலுக்கு ஏன் ஓடவேண்டும்?

தன் பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்கிறார் என்பதை சிவகுமாரே சொல்கிறார்.