” விழாக்களுக்கு நடிகைகள் வருகிறபோது மிகவும் கவர்ச்சியாக டிரஸ் பண்ணிக்கொண்டு வருகிறார்கள்! தங்களை நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கவனிக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய ஆடைகளை அணிகிறார்கள்”என்கிற பொதுவான குற்றச்சாட்டை இறக்கி வைத்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இதற்கு நடிகர்,தயாரிப்பாளர் நாகபாபு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
“பெண்கள் ரோடுகளில் நிர்வாணமாக நடந்தால் அதை சட்டம் பார்த்துக் கொள்ளும்.!
நடிகைகள் அவர்கள் இஷ்டப்படி டிரஸ் போட்டுக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
இன்ன டிரஸ்தான் போடனும் என்று அவர்களை நிர்பந்திக்க ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
விழாக்களுக்கு வருகிற நடிகைகளின் தொடைகளையும் மார்புகளையும் இவர்கள் ஏன் பார்க்கிறார்கள்?
பெண்களைப் பற்றிய பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்.
நாளைக்கே அகில இந்திய அளவில் பெண்கள் ஒன்று கூடி ஆண்கள் சாக்குத்துணியில்தான் டிரஸ் பண்ண வேண்டும் என்று சொன்னால் தாங்குவீர்களா?”என்று கேட்டிருக்கிறார்.
சூப்பர் கேள்வி சார்!