ரஜினி இளைய மகள் திருமணம் இன்று நடந்தது!எடப்பாடி நேரில் வாழ்த்து!!
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் ஆகியோரது திருமணம் இன்று காலை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடந்தது இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,துணைமுதல்வர் பன்னீர்செல்வம்,கடம்பூர் ராசு,அமைச்சர் வேலுமணி,நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் திருநாவுக்கரசு திருமாவளவன் ஆர்.எம். வீரப்பன் நடிகர் பிரபு குடும்பத்தினர் ,வைகோ,உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக திருமணத்திற்கு வந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றார்