‘தேவர்மகன்’ வீட்டில் கமல்ஹாசன்!
1992 -ல் பரதன் இயக்கத்தில் சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், நாசர் ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் தேவர் மகன். இந்த படத்தில் பிரமாண்ட மாளிகையில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.சென்ற மாதம் பொள்ளாச்சிக்கு சென்ற கமல்ஹாசன் , அங்கு ‘தேவர் மகன்’ படம் எடுக்கப்பட்ட ‘சிங்கா நல்லூர் அரண்மனைக்கு’ செல்ல வேண்டும் என தனது கட்சியினரிடம் கூறியுள்ளார். உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும், போதுமான நேரமின்மையால் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாம்.இந்நிலையில் கட்சி பணிகளுக்காக தற்போது மீண்டும் பொள்ளாச்சி சென்றுள்ள அவர், தேவர் மகன் எடுத்த அந்த பிரமாண்ட மாளிகைக்குச் சென்றுள்ளார். கிட்டதட்ட 27 வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தை சுற்றிப்பார்த்துள்ளார். தேவர்மகன் உருவாக்கப்பட்டபோது நடிகர்திலகத்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் அப்படம் குறித்த பழைய நினைவுகள் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் பகிர்ந்துள்ளார்.சமீபத்தில் தேவர்மகன்-2 சர்ச்சையைஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் 2.ம்பாகம் உருவாக்கும் திட்டம் இல்லை என கமல் கூறியிருந்தாலும், கமல் மனதில் தேவர்மகன்-2 படத்தை மீண்டும் வேறுவடிவில் படமாக்கும் திட்டம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.