ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் நாளை பிப்ரவரி 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக ரஜினியின் போயஸ் தோட்டஇல்லத்தில் விழாக்கோலம் தான்.இன்று காலை கூடஅவரது வீட்டில் திருமண சடங்குகள் வெகு விமரிசையாக நடந்தது .தனது மக்கள் திருமணத்திற்கு வரும்படிமுதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.நேற்று நடந்த மெகந்தி விழா நிகழ்ச்சியில்,ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாட்டுக்கு ரஜினி ஆட்டம் போட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தன து செல்ல மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைவதில் ஒரு தந்தையின் மகிழ்ச்சியையே இது காட்டியது.இந்நிலையில் தனது திருமணம் குறித்து சவுந்தர்யா தனது டுவிட்டரில் “வார்த்தைகளை கடந்து நான் ஆசிர்வதிக்கப்பபட்டிருக்கிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள். எனது டார்லிங் தந்தை. எனது தேவதை மகன். தற்போது என்னுடைய விசாகன்”, என அவர் கூறியுள்ளார்.
Blessed & grateful beyond words !!!! The three most important men in my life … my darling father … my angel son … and now you my Vishagan ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/v7Ra32oiYe
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 10, 2019