பாலா இயக்கிய ‘வர்மா’ கைவிடப்பட்டதை தொடர்ந்து,புதிய வர்மா படத்தை இயக்க, இயக்குநர் கவுதம் மேனனிடம் பேசி வருவதாகவும் வெளியானது. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் புதிய ‘வர்மா’ படத்தில் துருவ் விக்ரமுடன் நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் சமீபத்தில்வெளியான ‘அக்டோபர்’ என்ற படத்தில் நடித்த பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பனிதா சந்து ,‘வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இதற்கு முன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.