நடிகர் விஜய்யின் 63 வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.பெண்கள் கால்பந்து விளையாட்டையும் அதில் உள்ள அரசியலையும் பற்றி பேசும் படமாக இது உருவாகி வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் 64 வது படத்தை இயங்குவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது கார்த்தி நடித்து வரும் ‘கைதி’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் டார்க் கேங்ஸ்டர் கதை ஒன்றை இயக்குகிறார்.அதே சமயம் கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் விஜய்யை சந்தித்து ஒரு கதையைசொல்லியுள்ளதாகவும்கூறப்படுகிறது.