மொழி,பயணம், அபியும் நானும், ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் ராதா மோகனின் புதிய படமான ‘உப்பு கருவாடு’ படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து இன்று தணிக்கை அதிகாரிகளால் ‘U ‘ சான்றிதழ் பெற தகுதியான படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், கருணாகரன், நந்திதா,எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி,குமாரவேல்,சாம்ஸ்,நாராயணன், ரக்க்ஷிதா, சரவணன், பிரபல நடன கலைஞர் சதீஷ் டாடி என்னக்கு ஒரு டவுட் செந்தில் ஆகியோர் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளனர். இப்படத்தில் மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிடார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார் , ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.’எல்லா தரப்பினரும் ரசித்து பார்க்க வேண்டிய வகையில் ‘உப்பு கருவாடு’ படத்தை இயக்கி இருக்கிறேன்..படத்தின் இசை வெளியீட்டு தினமும், படம் ரிலீஸ் ஆகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் ‘எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.