“நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் விஷாலுக்கு பக்க பலமாக இருந்தவர்தான் ஐசரி கணேஷ். சங்கத்தில் பல நலத்திட்டங்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.
இந்த சுமூகமான நிலைமை நீடிக்காமல் போனதற்கு ஒரு படம்தான் காரணம் என்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் ஐசரி கணேஷின் நிறுவனத்துக்கு பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்தி-விஷால் நடிக்க ஒரு படம் தயாரிப்பதாக பேச்சு நடந்து எல்லா வேலைகளும் நடந்தது.
இந்த நிலையில்தான் கதையில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று விஷால் விரும்பினாராம்.ஆனால் ஐசரி கணேசுக்கு விருப்பமில்லை. இதில் ஆரம்பித்த கருத்து வேறுபாடு இருவரின் இடையில் விரோதத்தை வளர்த்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இன்னும் சிலர் ரமணா-நந்தா இருவருக்காக ஒரு தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சி நடத்தி அவர்களை விஷால் புரமோட் செய்தார் என்கிறார்கள்.விஷாலை தொடர்பு கொள்ள முடிவதில்லை.போனுக்கும் வருவதில்லை என்பதும் குற்றச்சாட்டு.
விஷாலுடன் இருந்தவர்களில் பலரை மலேசியா கலை நிகழ்ச்சிக்கு கூட்டிக்கொண்டு போகவில்லை. இதனால் அவர்கள் தற்போது ஐசரி அணிக்குப் போய் விட்டார்கள் என்கிறார்கள்.
அளவுக்கு மீறி குட்டி பத்மினிக்கு சலுகை கொடுத்தது சங்கத்தில் பலருக்குப் பிடிக்கவில்லை. வாணி ஸ்ரீ போன்ற முன்னணி நடிகைகளை உதாசீனம் செய்தார்.அவருக்கு சீரியல் தயாரிப்பதற்கு ஐசரி கணேஷிடம் உதவி பெறலாம் என்பதற்காக அணி மாறி இருக்கிறார் என்கிறார்கள்.