நடிகர் நடிகைகளுடன் செல்பி எடுத்து வைத்துக் கொண்டு ஜில்லா ஜிலேபிகளாக பலர் திரிகிற காலம் இது.!
முற்றும் துறந்த மடாதிபதிகளுக்கும் அந்த நோய் இருக்கிறது.
ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்வரூபேந்திர சரஸ்வதி மகாசுவாமி விசாக ஸ்ரீ சாரதா பீடம்..!!!!
மூச்சு விட்டுக்கோங்கோ.!
இவரை ஆந்திர,தெலுங்கான முதல் மந்திரிகள் தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுச்செல்வார்கள்.
அண்மையில் ஹைதராபாத் வந்திருந்த சுவாமிகள் இதையெல்லாம் பெருமையுடன் சொன்னவர் தன்னை வந்து தரிசித்துச்செல்லும் நடிகர் நடிகைகள் பாடகிகளின் பெயர்களை சொல்லியிருக்கிறார் .
முற்றும் துறந்த முனிவர் சுவாமிஜிக்கு இந்த ஜில்லா ஜிலேபி ஆசையெல்லாம் தேவையா?
அவர் சொன்ன பட்டியலில் இருந்த பிரபல பின்னணிப்பாடகி சுனிதா இதை கடுமையாக மறுத்து இருக்கிறார்.
“சுவாமிஜிக்கு இப்படியெல்லாம் பெருமை வேண்டுமா?”என கேட்டிருக்கிறார்.