இயக்குனர் பிரியதர்சனின் உதவியாளரான ஏ.எல்.விஜய். ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து மதராசபட்டிணம், தலைவா,தேவி,தேவி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் 2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில்,சமீபத்தில் தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஏ.எல்.விஜய், சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன் பாபு – அனிதா தம்பதியின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவை (இன்று) ஜூலை மாதம் 11-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
அதன்படி,இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஒட்ட லில் இயக்குனர் விஜய்க்கும், டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது.
இதில் இருவரது வீட்டாரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.டாக்டர் ஐஸ்வர்யா தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.