சுதந்திர தினத்தை குடியரசு நாளாக கொண்டாடிய ‘யார் இவன்’ நடிகை!

2007-மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் விருது. பின்னர் மிஸ் பெமினா.
அப்பா ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரி. மாஸ் கம்யூனிகேசனில் தேர்வு பெற்றவர் இந்த நடிகை. 2017-ல் ‘யார் இவன்’ என்கிற தமிழ்ப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை.
இந்த நடிகையின் பெயர் ஈஷா குப்தா.
இந்த புத்திசாலி நடிகைதான் அண்மையில் ஆகஸ்ட் 15-ம் தேதியை ‘குடியரசு நாளாக’ கொண்டாடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தியில் “இந்தியா விடுதலை பெற்ற மகிழ்ச்சிகரமான குடியரசு நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவு செய்திருக்கிறார்.
எங்கே போய் முட்டிக்கிறது.?