ரூ.2,800 கோடிசொத்துக்களை மகன்,மகளுக்கு பிரித்து கொடுத்த அமிதாப்பச்சன்!

75 வயதை தொட்டு விட்ட நடிகர் அமிதாப் பச்சன் தற்போதும் சினிமா,  தொலைகாட்சி  என எப்போதும் தன்னை மிகவும் பிசியாக வைத்து கொண்டுள்ளவர். பாலிவுட்டில் இன்றும் சூப்பர் ஸ்டாராகவே வலம் வருபவர்.

அமிதாப்- ஜெயாபச்சான் தம்பதிக்கு  அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் என்ற மகன்,மகள் உள்ளனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமிதாப், தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடன் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது. அமிதாப் பச்சன் கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்து வருவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.