A 1 படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து உற்சாகமடைந்துள்ள சந்தானம், முதன்முதலாக மூன்று வேடங்களில் சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள்.இப்படத்தின் பெயர் என்ன என்பதை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்க இருக்கிறது படக்குழு . பிரபல எழுத்தாளர் கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார்.
அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்து கே.ஜே. ஆர். ஸ்டியோஸ் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.
கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், விஜய்சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் படத்தையும் தயாரித்து வருகிறார்.
விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியீட்டவரும் இவரே. இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெறுகிறார்.
விரைவில் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. திறமை வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இண்ரஸ்டிங்கான நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் இணைய இருப்பது கூடுதல் செய்தி. அந்த விவரங்கள் வெகுவிரைவில் அப்டேட் செய்யப்படும் என்கிறது படக்குழு. பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.