அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில்லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடந்தது.. இந்த விழாவில் திரைத்துறையில் சாதனை படைத்த பல பிரபலங்களும் பங்கேற்றனர்.இதில் சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாபர்டேவுக்கு சிறந்த மாற்று இசை ஆல்பத்திற்கான கிராமி விருது அறிவிக்கப்பட்டது.
விருது விழாவில் லாபர்டே. கறுப்பு நிற உடையில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தார் . அப்போது, ஒட்டுமொத்த மீடியாவும் அவரைத் தான் உற்று நோக்கியது.சிலரது பார்வையில் ஆனந்தம். பலரது பார்வையில் அதிர்ச்சி ஏன் தெரியுமா?.
உள்ளாடை அணியாமல் மேலாடையை திறந்து முன்னழகு முழுவதையும் காட்டி அரை நிர்வாணமாய் வந்தார் லாஃபர்டே. மேலும் தனது மார்பு பகுதியில் சிலி மொழியில் அவர்கள் டார்ச்சர் செய்கிறார்கள், பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள் என எழுதியிருந்தார்.
தென் அமெரிக்க நாடான சிலியில்,அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் தான் பாடகி மோன் லாஃபர்டே மேலாடை இன்றி விருதை பெற்ற அவர், அந்த விருதை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.