‘நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது. அண்ணா, கருணாநிதி, என்.டி.ஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கமல் துணிச்சலாக அரசியலுக்கு வந்துவிட்டார். நிச்சயம் அவர் விஸ்வரூபம் எடுப்பார்.ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் முன்பே அவரிடம் கூறியிருந்தேன். ஆனால், அவருக்கு முன்பே கமல்ஹாசன் வந்துவிட்டார்.
ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏமாற்றிவிடாதீர்கள். ரஜினி, கமல் இணைந்து அரசியலுக்கு வரவேண்டும். இருவரும் சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டின் தண்ணீரைக் குடித்தாலே தமிழன்தான்.
ஆள்பவர்கள் புதிதாக வருபவர்களுக்கு வழிவிட வேண்டும். அராஜகம் இல்லாத ஊழல் இல்லாத அரசைத் தர வழி விடுங்கள் .உங்கள் தம்பிமார்கள் வரும்போது நீங்கள் தான் அவர்களுக்கு வழிவிட வேண்டும்’ இப்படி ஆவேசமாக பேசியிருப்பது யார் தெரியுமா? நம்ம எஸ்,ஏ.சந்திரசேகர் தான்.கமலின் உங்கள்நான் 60 விழாவில்.