நடிகர் நாசரின் இயக்கத்தில் வெளியான `அவதாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பாலாசிங் (வயது 67),தொடர்ந்து `புதுப்பேட்டை’, `விருமாண்டி,தென்பாண்டி சிங்கம் படங்களின் மூலம் தமிழ்த்திரையுலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார்.
பாலா சிங்கின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள அம்சிக்காகுழி என்ற கிராமம். பள்ளி, கல்லூரியில் நாட்களில் தொடங்கி நாடகங்கள் மீது ஈர்ப்பு. நாகர்கோவிலில் கோயில்கள், தேவாலயங்கள் ஆகிய இடங்களில் நாடகங்கள் போடுவதில் நன்கு பிரபலமாகி, ‘செயின்ட் சேவியர் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவையும் நடத்தியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு,பாலா சிங்குக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது . அதைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிக்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது .