நீண்ட முயற்சிக்கு பின், அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் இப் படத்தில் நடிகர்கள்,விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன்,பிரகாஷ் ராஜ்,பிரபு, ஜெயராம்,ஜெகன்,தலைவாசல் விஜய் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ரேவதி, ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா லெக்ஷ்மி சங்கீதா,தேவதர்ஷினி,உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.இந்நிலையில், ‘இந்தப் படத்தில் தானும் இணைந்திருப்பதாகவும்,தனது கனவு நனவாகியிருக்கிறது’ என்றும், இந்தப் படத்துக்காக குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாகவும் .பிரபல மலையாள நடிகர் லால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் இந்தப் படத்தில்நடிகை திரிஷாவும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் திரிஷா பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தெரிகிறது. விரைவில் தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து செல்லவுள்ளனர்.