தமிழில் ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. தொடர்ந்து திருட்டுப்பயலே, நான் அவனில்லை,குருவி சந்திரமுகி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவர் ,குடும்பம், குழந்தை என திரைத்துறையை விட்டு ஒதுங்கினார். இந்நிலையில், ஆடின காலும் பாடின வாயும் சும்மாயிருக்காது என்பதைப்போல மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.இதற்காக தனது உடல் எடையை கணிசமாக குறைக்கும் முயற்சியில் ஜிம்மில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது பார்ட்டி ஒன்றில் பங்கேற்றவர் கையில் மது கோப்பையுடன் , தனது தோழியுடன்உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.