கோலிவுட்டையே ’சுசி லீக்ஸ்’ என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர்,நடிகைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட்டையே அலற விட்டவர் பின்னணி பாடகி சுசித்ரா.
ஆனால், அந்த வீடியோக்கள் வெளியானதற்கும் சுசித்ராவுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும்,அவருடைய டுவிட்டர் பக்கம் யாரோ ஒரு மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது கணவர் கார்த்திக் குமார் கூறியதை அடுத்து இப் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் சுசித்ரா தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால் இது எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தாத அவரே பாடிய பாடல் வீடியோ என்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.சுசித்ரா மீண்டும் தமிழ்த்திரையுலகில் பின்னணிப் பாடகியாக வலம் வருவார் என்கிறார்கள்.
https://www.youtube.com/watch?time_continue=1&v=tfYX7_gQ9R8&feature=emb_logo