கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்துக்கு ‘கோப்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.
ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் தலைமையிலான படக்குழு 2020 புத்தாண்டை பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.