மதுரை . அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டு,இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது.உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தது.
தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பும் டோக்கன் குளறுபடியால் மாடு உரிமையாளர்களிடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது.இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன் பிறகு அங்குசுமூக நிலை ஏற்பட்டது.இதையடுத்து,காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அண்டா, குக்கர் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்து வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 4 மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர் உட்பட மொத்தம் இதுவரை 16பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.