ரஜினி தற்போது, ஷங்கரின் ‘ 2.O’, பா.ரஞ்சித்தின் ‘கபாலி ‘என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் . சென்னை, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் முகாமிட்டிருக்கிறது ‘கபாலி’ படக்குழு. இப்படத்தில் வில்லன்களாக தைவான் நடிகரான வின்ஸ்டன் சாவ் (Winston Chao) மற்றும் மலேசியன் நடிகர் ரோஸ்யம் நார் (Rosyam Nor) ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர்.