கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் உள்ள பல நாடுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த குவாரன்டைன் நாட்களை மக்களும் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு வகையில் வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் தன் மனைவி தீபிகா படுகோன் வீட்டு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, `அவள் என்னுடன் இருக்கும்போது எண்டார்பின் (மகிழ்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்) இரண்டு மடங்கானதுபோல உணர்கிறேன்” என்று ரன்வீர் என மிகவும் உருகியிருக்கிறார்.இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அதில் ‘நான் ஏன் ஆண்ட்ரி கோஸ்சீவ்வை திருமணம் செய்தேன் தெரியுமா? என் எனக்கு கணவர் பாத்திரம் தேய்த்துக் கொடுத்து உதவி செய்கிறார். ஒவ்வொரு கணவரும் தங்கள் மனைவிக்கு இப்படி ஏதாவது உதவி செய்யுங்கள்’ என்று கூறிவிட்டு கணவர் ஆண்ட்ரிக்கு லிப்கிஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். கிளுகிளுப்பான இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ இணைப்பு கீழே…