சிம்புவை வீட்டுக்குள்ளேயே ஓடவிட்ட கொரோனா!

சுரேஷ் காமாட்சி  தயாரிப்பில்,வெங்கட் பிரபு இயக்கத்தில் ,சிம்பு நடித்து வரும் புதிய படம்,  மாநாடு. இதில் கதாநாயகியாக  கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.  சிம்பு இப்படத்தில்  அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார்.

கொரோன வைரஸ் தாக்குதலால் அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர் சிம்பு என்ன செய்கிறார் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து வீட்டில் முடங்கியுள்ள சிம்பு என்ன செய்கிறார் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில்  சிம்பு தனது  வீட்டுக்குள்ளேயே சுற்றி,சுற்றி ஓடி வருகிறார்.இவ்வீடியோ சிம்பு ரசிகர்களால்  டிரெண்ட்  ஆகி வருகிறது.