கே. பாக்யராஜ் இயக்கி, நடித்த ’வீட்ல விசேஷங்க’ மற்றும் ’பெரிய மருது’, ‘ஜெயம்’ ‘சிலம்பாட்டம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பிரகதி. பட வாய்ப்புகள் குறைந்த நிலையில்,திருமணம் கணவர்,குழந்தை என ஒதுங்கிய இவர்,தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு வீட்டில் சும்மா இருக்கும் பெரும்பாலான கோலிவுட்நடிகர் நடிகைகள் தற்போது ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது நடிகை பிரகதியும் தனது மகனுடன் இணைந்து இந்த பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார். வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு இந்த வயதிலும் தனது மகனுடன் குத்தாட்டம் ஆடிய பிரகதியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.ஆன்ட்டியின் அசத்தலான எனர்ஜி பார்க்கிறவர்களை மிரளவைக்கிறது.
https://www.instagram.com/p/B-4PYXTDSOe/?utm_source=ig_web_copy_link