பிரபல ஒளிப்பதிவாளர் பீ சி ஸ்ரீராம் தனது 60ஆவது பிறந்த நாளை தன்னுடைய பிரதான சீடர்களுடன் சிவகார்ர்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிக்க புதிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பில் கொண்டாடினார்.
தன்னுடன் பணியாற்றி இன்று தங்களுக்கு என தனிப் பெயரை ஈட்டிக் கொண்ட தனது சிஷ்யர்களும் அவர்களது குடும்பத்தினரும் வந்து இருந்து வாழ்த்தியதை பி சி ஸ்ரீராம் பெரிதும் ரசித்தார். பழைய நினைவுகளை நினைவுக் கூர்ந்து அவர் கலந்துரையாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பி சி ஸ்ரீராம் அவர்களோடு தான் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட சிவ கார்த்திகேயன் ‘ சாருடைய நகை ச்சுவை உணர்வு சூப்பர். அந்த உணர்வும் , எளிமையுடன் பழகும் அவரது தன்மையும் என்னை போல் வளரும் கலைஞர்களை அவரிடம் நெருங்க விடுகிறது, அந்த நெருக்கமே எங்களுக்கு உற்சாகம் என்றார்.