திரைப்படம்,மற்றும் சின்னத்திரை ஆகியவற்றின் (போஸ்ட் புரடக்ஸன்) பணிகளுக்கு இன்று தமிழக அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது!
அந்த அறிக்கையின் விபரம் வருமாறு,
“தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால், பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தைய (post-production) பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் கீழ்கண்ட தயாரிப்புக்கு பிந்தைய (போஸ்ட் புரொடக்ஷன்) பணிகளை மட்டும் 11-5- 2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்.
1, படத்தொகுப்பு (எடிட்டிங்) அதிகபட்சம் 5 பேர்.
2, குரல் பதிவு (டப்பிங்) அதிகபட்சம் 5பேர்
3, கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ்( VFX/CGI)10 முதல் 15 பேர்
4, டி .ஐ. எனப்படும் நிற grade-ல் அதிகபட்சம் 5 பேர்.
5, பின்னணி இசை (ரீ ரிக்கார்டிங்) அதிகபட்சம்5பேர்,
6, ஒலிக்கலவை (சவுண்ட் டிசைன்/ மிக்ஸிங்) அதிகபட்சம் 5 பேர்
எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டுகளை பெற்றுத்தந்து அவர்கள் சமூக இடைவெளியுடன முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி யை உபயோகித்து மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.இவ்வாறு இயக்குனர் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.