ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உளவியல் த்ரில்லராக உருவாகி வந்த ‘பெண்குயின்’ திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது.
இந்நிலையில்,இப் படத்தின் டீசர் வரும் நாளைமறுநாள் (ஜூன் 8ம் தேதி) அமேசான் பிரைமில் வெளியாகும் என கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக கீர்த்தி சுரேஷ் தோன்றும் இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,தற்போது முகத்தில் வெட்டு காயங்களுடன் ரத்தம் வழிய, வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் தோன்றும் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.












