மாரா மாதவன் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘மாரா’. இது மலையாளத்தில் வெளியான ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது.. மலையாளப் பதிவில் துல்கர் சல்மான் நாயகனாகவும் பார்வதி நாயகியாகவும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படம் திலீப் குமார் இயக்கத்தில், பிரதீக் சக்ரவர்த்தி தயாரிப்பில் ‘மாரா’வாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தது.கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடங்கியிருப்பதாக படக்குழுவினர் முன்பு தெரிவித்த நிலையில்,
தற்போது, ‘மாரா’ திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதில், “மாதவன் மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில், உருவாகி வரும் “மாறா” திரைப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் கொரொனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
மிக விரைவில் இப் படத்தின் இறுதிகட்ட பணிகள் மற்றும் பின்னணி இசைகோர்ப்பு பணிகள் தொடங்க உள்ளன. “கல்கி” திரைப்படத்தினை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார்.இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார்”. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.