எங்களுக்கு கொரோனாவா? பாருங்க…..நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா…. எவ்வளவு ஜாலியா சின்னக் குழந்தைகளா மாறி…. விளையாடிகிட்டு இருக்கோம் சும்மா சும்மா காமெடி பண்ணாதீங்க! என தங்களைப்பற்றிய கொரோனா செய்திக்கு விக்கி, நயன் இருவரும் தங்களது இன்ஸ்டாவில் செயலியின் உதவியுடன் குழந்தைகளாக மாறி நர்சரி ரைம்ஸ் பாடும் வீடியோவை இணைத்துள்ளனர்.
அந்த வீடியோ பதிவில்,”எங்களைப் பற்றிய செய்திகளையும், எங்களுக்கு கொரோனா என்கிற உங்களின் கற்பனை வளத்துக்கும்,மற்றும் அனைத்து பத்திரிகை மற்றும் சமூக ஊடக அன்பர்களின் கற்பனையையும் நாங்க பார்க்கிறோம். எங்கள் நலம் விரும்பிகளுக்கு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்-ஆரோக்கியமாக இருக்கிறோம், உங்களின் ஜோக்குகளை, நகைச்சுவையாகவும் பார்க்க, கடவுள் எங்களுக்கு போதுமான மன வலிமையையும், பலத்தையும்,மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் . இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளனர்.
https://www.instagram.com/p/CBtI_1mB2LB/?utm_source=ig_web_copy_link