நடிகர் விஜய்க்கு இன்று 46 வது பிறந்த நாள். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில், தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனாலும் ரசிகர்களின் ஆர்வத்துக்கு அணை போட முடியாதே. தங்களது தளபதிக்கு தமிழகம் முழுவதும் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டியும்,நலத்திட்ட உதவிகள் வழங்கியும், சமூக வலைத்தளங்களிலும் #HBDTHALAPATHYVijay, #WaitingForMaster, #ThalaFansDay உள்ளிட்ட ‘ஹேஷ்டேக்’குகளை உருவாக்கி ‘டிரெண்டாக்கி அவரது பிறந்த நாளை கொண்டாடி அமர்களப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு நள்ளிரவு வெளியிட்டுள்ளது.’கொளுத்துங்கடா’ என்ற ‘டேக்’ லைனுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.