பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு (வயது 61)நேற்று மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை நானாவதி மருத்துமனையில் தீவிர சிகிசசை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனக்கருதி கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
அதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாக அம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.அவரது ரசிகர்கள் பலரும் சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் தனது டுவிட்டரில்,”நான் இப்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறேன். எனக்கு கோவிட்-19 சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. மருத்துவர்களின் உதவியால் இன்னும் ஓரிரு நாட்களில் நான் வீடு திரும்புவேன். உங்கள் வாழ்த்துக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Just wanted to assure everyone that I’m doing well. I’m currently under medical observation & my COVID-19 report is negative. With the help & care of the doctors, nurses & staff at Lilavati hospital, I should be home in a day or two. Thank you for your well wishes & blessings 🙏
— Sanjay Dutt (@duttsanjay) August 8, 2020