போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. நிக்கி கல்ராணியின் சகோதரி.
போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமாவில் வருகிற திடீர் திருப்பம் வருகிற மாதிரி நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டர் ஒருவரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
சஞ்சனா கல்ராணியும், டாக்டர் அஜீஸ் பாஷாவும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் நடிகை சஞ்சனா கல்ராணி மறுத்து,தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர்தான் சொல்லியிருந்தார் .
கூடுதல் தகவலாக ,சஞ்
.இது குறித்து நடிகை சஞ்சனாவின் அம்மா ரேஷ்மா கல்ராணி கூறுகையில், ‘சஞ்சனா கல்ராணிக்கு டாக்டர் அஜீஸ் பாஷாவுடன் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். கொரோனா வைரஸ் காரணமாகத் திருமணத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது’ என தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு போலீசார், நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில்சோதனை நடத்த போவதற்கு முன், அங்கிருந்து ஒருவர் அவசர அவசரமாக வெளியே சென்றதாக தகவல் வெளியானது .
அவர்தான் டாக்டர் அஜீஸ் பாஷா .! அட பாவமே.!