சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம்,அண்ணாத்த. இப்பட த்தின் படப்பிடிப்பு,கடந்த 2019 டிசம்பரில் தொடங்கி,.தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கொரோனா லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களை கடந்த நிலையில்,தற்போது வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நவம்பர் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்க படுவது உறுதியாகியுள்ளதாகவும்,ரஜினிக்
ரஜினிகாந்த் வரும் அக்டோபர் மாதம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மீண்டும் சந்திக்கிறார். அப்போது வேட்பாளர் தேர்வு, தேர்தல் செலவு குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட்டு விடுமாம். மதுரை அல்லது திருச்சியில் முதல் மாநாடு நடத்துவது குறித்தும்,விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து,ஜனவரியில் அண்ணாத்த படத்தின் 20 நாட்கள் படப்பிடிப்பை முடித்த கையோடு, ரஜினி ஐதராபாத் அல்லது மும்பை சென்று அங்கிருந்து உடல்நிலை குறித்த வழக்கமான பரிசோதனைக்கு அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க பயணத்தை 10 நாட்கள் முடித்து விட்டு, நேராக சென்னை திரும்பி அரசியல் கட்சி வேலைகளை அதிரடியாக தொடங்கி விடுவார் என்கிறார்கள். அதே சமயம் இமயமலை பயணமும் உண்டு என்கிறார்கள். மேலும் நவம்பர் மாத தொடக்கத்திலேயே அரசியல் கட்சியின் பெயரை ரஜினி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை அரசியல் கட்சி குறித்து ரஜினி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும்,அவர் வகுத்த வியூகத்தின் படி, அவரது பரபரப்பு அரசியல் ஆட்டத்தை கிட்டத்தட்ட ரஜினி தொடங்கி விட்டார் என்கிறார்கள் உறுதியாக…