தமிழகத்தில் 5-ஆம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவது குறித்தும், தடை, புதிய தளர்வுகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் விபரம் வருமாறு,
1, திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு:
திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.(முன்பு 75 பேர்) திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை தொடர்ந்து நீடிப்பு.
2, புற நகர் ரெயில்சேவைக்கு அனுமதி இல்லை:
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து நீடிக்கும்.
3, சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு:
பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.
4, மதம், அரசியல், கலாச்சர கூட்டங்கள் நடத்துவதற்கான தடை நீட்டிப்பு;
மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடர்ந்து நீடிக்கும்.
5, உணவகங்களில் இரவு 10 மணி வரை பார்சல் வழங்க தடை இல்லை :
அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்கலாம்.
6,சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி
7, ஊரக, நகர பகுதிகளில் வாரச்சந்தைகள் செயல்பட அனுமதி
8, மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைப்பு.
இது சம்பந்தமாக மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.”