ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சுல்தான்’. இதில் கார்த்தியின் ஜோடியாக ராஷ்மிகாநடிக்கிறார். கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் அனைவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தனது டுவிட்டரில் வெளியிட்டு கூறியுள்ளதாவது,
“சுல்தான் படப்பிடிப்பு முடிந்தது. கதைக்கருவை மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்டது முதல் அது எங்களைப் பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னுடைய படங்களில் அதிகமாகச் செலவழிக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். கஷ்டப்பட்டு உழைத்த படக்குழுவினருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்புமுடிவடைந்திருப்பதாகவும், நல்ல ஒரு பண்டிகை நாளில் படத்தை வெளியிட காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ‘சுல்தான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையிடப் படலாம் என தெரிகிறது.