நடிகர் தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’ இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் ராட்சசன்’ ராம் குமார் இயக்கும் மற்றொரு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.இந்நிலையில் சன்டிவி நிறுவனம் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது 44 வது படத்தை தயாரிக்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை தனுஷின் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர்இயக்க உள்ளதாகவும்,இப் படத்தில் தனுஷ் ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கு கிட்டத்தட்ட 5 வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்கிறார்கள்.
அனிருத்ஏற்கனவே ,தனுஷ் நடிப்பில் ,ஐஸ்வர்யாராஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3, மற்றும் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.