தனுஷூக்கு ஜோடியானார் மேகா ஆகாஷ் !
‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து, தனுஷ் இன்று காலை தொடங்கிய இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை அருகில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரி ஒன்றில் இன்று காலை தொடங்கி,தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இவர் ஏற்கனவே ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப் படப்பிடிப்பு குறித்து தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், ‘மற்றொரு படம் மற்றொரு வேடம், புதிய படமான ‘எனை நோக்கி பாயும் தோட்டாவின் படப்பிடிப்பு இன்று முதல் உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் தொடங்குகிறது’ என்று தெரிவித்துள்ளார்