பதவி இருந்தால் என்னவேனும்னாலும் பண்ணுவீங்களாடா பாவிகளா?
இப்படி இருந்தா எப்படிடா இந்தியா வல்லரசு ஆகும்?
பாலியல் வன்புணர்வு, பலாத்காரத்துக்கு பெயர் பெற்ற மாநிலமாகிவிட்டது உத்திரபிரதேசம்! பலாத்காரம் என்பது அங்கே அவிங்களுக்கு தூத்பேடா திங்கிறது மாதிரி ஆகிவிட்டது.அந்த மாநிலத்தை ஆள்றது பிஜேபியா? யோகி ஆதித்யநாத் முதல் மந்திரி.! அதான் மீடியாக்கள் அடக்கி வாசிக்கிது போல.!
25 வயது பாடகியை, எம்எல்ஏ .வும் , அவரது மகனும், உறவுக்காரரும் அடுத்தடுத்து பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
நிஷாத் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ, விஜய் மிஸ்ரா.
இவர் மீதுதான் 25 வயது பாடகிபோலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
விஜய் மிஸ்ரா தற்போது நில ஆக்கிரமிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்ததாக கூறியுள்ளார் அந்த பாடகி.
கோபிகஞ்ச், காவல் நிலையத்தில் பாடகி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
2014ம் ஆண்டு. மிஸ்ரா வீட்டில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதில் நானும் கலந்து கொண்டு பாடினேன். . பாடல் நிகழ்ச்சி முடிந்தது. திரும்பலாம் என்று நினைத்தபோது, வீட்டுக்குள் வைத்து விஜய் மிஸ்ரா துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்.
அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டார். மேலும், நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். பயம் உயிர்ப்பயம் . எம்எல்ஏ மகனும் வாரணாசியில் ஒரு ஹோட்டலில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார். பிறகு, அவரது மகனையும், உறவுக்காரரையும் என்னை வீட்டில் டிராப் செய்ய சொன்னார். ஆனால் அவர்கள், டிராப் செய்யும் முன்பாக அடுத்தடுத்து என்னை பலாத்காரம் செய்தனர்.
விஜய் மிஸ்ராவிடம் வீடியோ இருப்பதாலும், அவர் வேறு பல கேஸ்களில் சம்மந்தப்பட்ட பெரிய நபர் என்பதாலும், நடந்த கொடுமையை வெளியே சொல்ல பயந்து இருந்து விட்டேன். இப்போது அவர் நில ஆக்கிரமிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே இப்போது தைரியமாக வெளியே சொல்கிறேன்.”என்கிறார் பாடகி.