“என்னண்ணே ,அந்த வனிதாம்மா,புருசன் பீட்டர்பாலை கோவாவில வெச்சி செம பரேடு நடத்துனதா பேசிக்கிறாய்ங்களே .நெசமாண்ணே?”
“எனக்கென்ன தெரியும்டா குருசாமி.! நானும் கேள்விப்பட்டேன். கோவா எப்படிப்பட்ட எடம் தெரியும்ல .அந்த ஊரு சரக்கு செம தூக்கு தூக்குமாம். ராஜபோதைங்கிறாய்ங்க. அங்க போற குடிமகன்கள் டேஸ்ட் பண்ணாம திரும்பமாட்டாய்ங்களாம். கேள்விப்பட்டதுதான்யா.! ஏலே மக்கா! வனிதாம்மா புருஷன் பீட்டரு குடிக்கவே மாட்டாரு ,மகா உத்தமருன்னு சொன்னுச்சே.! கோவாவில ரெண்டு பேரு சண்டைக்கு அந்த டிரிங்க்ஸ்தான் காரணம்னு இப்ப பேசிக்கிறாய்ங்களே! என்னத்த சொல்றது?”
“அண்ணே, வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் சிக்கல் வந்து சண்டை போட்டு பிரிஞ்சிட்டதா ஒரு தகவல் இருக்கு!”
“ஓ ,அதான் அடுத்தவ புருசனை லாவிட்டு வந்தா அந்த குடும்பம் வெளங்காதுன்னு பேசிக்கிறாய்ங்களா! டே குருசாமி.! ஒருத்தன் வவுத்தெரிச்சல்னா பராவாயில்லை. ஊரே சேர்ந்து மண்ணள்ளி தூத்துச்சே !எப்படிடா விளங்கும்?”
“கோவாவில அந்த வனிதாம்மா பீட்டர்பாலை காரை விட்டு கீழே தள்ளிவிட்டுருச்சாமே…..! செம சாத்துப்படியாம்! இதையும் பேசிக்கிறாய்ங்கண்ணே ! இப்ப பீட்டரு சென்னைக்கு வந்து பாட்டிலும் வாழ்க்கையுமா இருக்கார்னு சொல்றாய்ங்க.!”
“குருசாமி. ஏதா இருந்தாலும் அந்த வனிதாம்மா வாயத்தொறந்து சொன்னாத்தான் எது உண்மை எது புளுகுன்னு தெரியும். பார்ப்பம் வாயை தொறக்குதான்னு!”