ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், பிரைம் சினிமாஸ் கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரித்து வரும் புதிய படம்,’கலியுகம்’.
ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை இயக்கி வரும் பிரமோத் சுந்தர் கூறியதாவது,”இன்றைய தமிழ்த்திரையுலகில் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் இளம் இயக்குநர்கள் நிறைய பேர் அறிமுகமாகி வருகிறார்கள்
இதனை சமீப காலமாக வரும் புதிய படங்களின் கதைக்களங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில்,இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் முற்றிலும் துடிப்புமிக்க இளைஞர்களுடன் களமிறங்கியுள்ளோம்.
இப்படத்தின் கதையைக் கேட்டதும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்தார்.. நான் இதுவரை யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியவில்லை. விளம்பரத் துறையில், சில குறும்படங்களை இயக்கியுள்ளேன் பேரழிவுக்கு பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைகதைக்களத்தை மையமாக கொண்டு இப் படம் உருவாகிறதுஎன்கிறார்.
இதன் படப்பிடிப்பு 2021- ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் தொடங்குகிறது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது