நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும், அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும்இந்த கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதக்க நேற்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நடிகர் விஜயின் தந்தை எஸ்,ஏ.சி கூறுகையில்,”அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல’ என்று கூறினார். இந்நிலையில்,என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் என் பெயரில் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.
அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்”என நடிகர் விஜயும் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் “என்னிடம் எஸ்.ஏ.சி அஸோஸியேஷனுக்குக்கு என்று சொல்லித்தான் கையெழுத்து வாங்கினார். ‘நான் கையெழுத்து போட்டது கட்சிக்கு தான் என தெரியாது. அதனால் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகி விட்டதாக கூறியுள்ளார்.