நடிகர் தியாகராஜன், கைவசம் ஸ்பெஷல்-26, மற்றும் குயீன் படங்களின் ரீமேக் ரைட்ஸ் ஆகியவை உள்ளன.இதில் குயீன் இந்திப் படத்தில் கங்கணா நடித்த கேரக்டரில் நயன்தாராவை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என தியாகராஜன்.தன ஆதரவாளர்கள் மூலம், இந்தப்படத்தை தானே இயக்குவதாகவும், பிரசாந்த் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவலை கசியவிட்டதால், இந்தப்படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க அழைத்தபோது, அய்யய்யோ! இவங்க கூட்டனியிலா என ஜகா வாங்கினார் நயன்தாரா. இப்போது இதே கதையை ரேவதி இயக்குகிறார், சுகாசினி திரைக்கதை எழுதுகிறார் என்பது முடிவாகியுள்ளது.. இப்போது நயன்தாரா ஒகே சொல்லிவிடுவார் என ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு, கிடைத்தது ஏமாற்றமான பதிலே.. இந்தப்படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கேட்க, தன்னால் முடியாது என கூறிய நயன்தாரா, இனி இந்தப்படம் தொடர்பாக தன்னிடம் பேச வரவேண்டாம் என தயாரிப்புத் தரப்புக்கு பெரிய கும்பிடு போட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.