நடிகர் ஆர்.ஜே . பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா,தற்போது நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது முதுகில் பெரிய பச்சை குத்திக்கொள்ளும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே நயன்தாரா நடிகர் பிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை தனது இடது கையில் ‘பிரபு’ என்று பச்சை குத்திக் கொண்டார்.
பின்னர் காதல் முறிவுக்கு பின் அதை அப்படியே பாசிட்டிவிட்டி என்ற பெயராக நவீன லேசர் சிகிசசையில் உருமாற்றினார்.இந்நிலையில் தற்போது தனது முதுகில் மிகப்பெரிய டாட்டூவை வரைந்து கொண்டுள்ளார். ,இப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.