நடிகைகளின் ‘திடீர்’ பிக்னிக் ஸ்பாட் ஆக மாறிவிட்ட மாலத்தீவில் ஏற்கனவே நடிகைகள் டாப்ஸி, காஜல்அகர்வால் , பிரணிதா, வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா என பல நடிகைகள் குவிந்துள்ள நிலையில், தற்போது பிரபல இந்தி நடிகை ஷோபி சவுத்ரி அங்கு சென்றுள்ளார். தினமும் குறைந்தது இரண்டு கவர்ச்சி புகைப்படங்களையாவது தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்யாவிட்டால் தூக்கமே வராது என்ற பட்டியல் நடிகைகளில் ஷோபி சவுத்ரியும் ஒருவர்.. இவரும் வழக்கம் போல, பீச் ரிசார்ட்டில் கடற்கரைக்கு அருகில் அறை எடுத்து, பிகினியில் நடமாடும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். கடற்கரையில் கையில் மது கிண்ணத்துடன்ஒய்யார நடையுடன்,”ஆகாயம் ஆயிரம் வண்ணங்களை பேசும்போது” .என்றபதிவுடன் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.