தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு முரளி ராமநாராயணன் தலைமையிலான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முன்னாள் தலைவர் விஷாலிடம் கணக்குகள் தொடர்பான விளக்கத்தை கேட்டு தனி அலுவலரும் தணிக்கை குழுவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசில்,விஷால்,தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தபோது செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள் தொடர்பான விளக்கத்தினை தனி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அந்த நோட்டீஸில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று முரளி ராமநாராயணன் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நட த்தி வருகின்றனர் என்கிறார்கள்.