தமிழ்நாடு காங்கிரஸின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ம் தேதி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..